சிறப்பு பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்
சிறப்பு பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்
ADDED : ஆக 22, 2024 04:38 AM

சென்னை : அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஆன்லைனில் நேற்று துவங்கியது.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு பிரிவினர், 7.5 சதவீத ஒதுக்கீட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நேரடி கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
மாணவர்கள், 'நீட்' ஹால் டிக்கெட், மதிப்பெண் கார்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக சரி பார்த்துக்கொண்டு வர வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரத்திற்கு முன், கவுன்சிலிங் மையத்திற்கு மாணவர்கள் வர வேண்டும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.