போராட்டம் நடத்திய மருத்துவ பணியாளர்கள் குண்டுகட்டாக கைது
போராட்டம் நடத்திய மருத்துவ பணியாளர்கள் குண்டுகட்டாக கைது
UPDATED : அக் 12, 2026 09:10 PM
ADDED : அக் 12, 2026 07:59 PM
சென்னை: பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அ
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், பணியாளர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பணியாளர்களையும் துரத்திச் சென்று, குண்டுகட்டாக துாக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.
அத்துடன், அருகே இருந்த கழிப்பறையில் இருந்த பெண்களையும் உள்ளே சென்று, மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அ
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், அமைச்சர் அருண்ராஜ் பேச்சு நடத்தினார்.
அதில், நவ., 10ம் தேதிக்குள் சுமுக தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிடுவதாக, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
இந்த சங்கத்தினருடன் சில தினங்களுக்கு முன் தான் பேச்சு நடந்தது; உரிய கால அவகாசம் அளிக்காமல், போராட்டத்தை தொடங்கினர்.
மீண்டும் அவர்களுடன் பேச்சு நடந்தது. அவர்களின் கோரிக்கையை, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக தெரிவித்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவப் பணியாளர்கள் கைதுக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயலர் சுபின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க.,
இது தான் மாற்றமா?
விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் என, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தும் எந்த பிரிவினரையும் நேரில் அழைத்து பேசாமல், அடக்குமுறையை ஏவுவதற்கு பெயர் தான் மாற்றமா? பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களுடன் பேச்சு நடத்த, முதல்வர் முன்வர வேண்டும்.
- – உதயநிதி
