sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்.11ல் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

/

ஏப்.11ல் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ஏப்.11ல் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ஏப்.11ல் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்


ADDED : மார் 14, 2024 07:13 AM

Google News

ADDED : மார் 14, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது'' என கோயில் இணைக்கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஏப்.11 ல் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. ஏப். 12 காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். ஏப்.13 முதல் 18 வரை தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

ஏப்.18 அன்று இரவு 7:35 க்கு மேல் 7:59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடைபெறும். ஏப். 20 மாலை 6:30 இரவு 11:30 வரை திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் நடைபெறும். அன்று மாலை பூப்பல்லக்கில் மீனாட்சி - சொக்கநாதர் நான்கு மாசி வீதிகளிலும் வீதிஉலா வருவர். ஏப்.22 காலை 6:05 முதல் 6:45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். ஏப். 23 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

ஏப். 22 அன்று தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.,23 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவும் நடைபெறும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us