ADDED : செப் 28, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:டில்லியிலிருந்து திரும்பிய முதல்வரை, செந்தில் பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரதமரை சந்திக்க, டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று இரவு 7:10 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் முதல்வரை சந்தித்த செந்தில் பாலாஜி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அவரை அருகில் நிற்க வைத்து, கைகளை கோர்த்தபடி, முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின், திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு முதல்வர் சென்று விட்டார்.
முன்னதாக, அமைச்சர் உதயநிதியை அவரது வீட்டில் செந்தில் பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்ற அமைச்சர்களும் செந்தில் பாலாஜியை சந்தித்து வருகின்றனர்.