ADDED : நவ 08, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சேலம், நெல்லை, கடலுார் மாவட்டங்களில் மெகா நுாலகங்கள் அமைக்க, பொதுப்பணி துறை 'டெண்டர்' கோரி உள்ளது.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், திருச்சி, மதுரை கலைஞர் நுாலகங்களை தொடர்ந்து, சேலம், நெல்லை மற்றும் கடலுாரில் மெகா நுாலகங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சேலத்தில், பாரதிதாசன் பெயரில், 75,000 சதுரடி பரப்பளவில், 74 கோடி ரூபாய் செலவிலும்; நெல்லையில் 70,000 சதுரடி பரப்பளவில், ஐந்து தளங்களுடன், காயிதே மில்லத் பெயரில், 69 கோடி ரூபாய் செலவிலும், கடலுாரில், 75,000 சதுரடி பரப்பளவில், அஞ்சலை அம்மாள் பெயரில் 80 கோடி ரூபாய் செலவிலும், மெகா நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

