நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மவுலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக, தமிழகத்தைச்
சேர்ந்த கமால் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வராக
பணியாற்றியவர் கமால் ஷெரீப். இவர் தற்போது, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை
அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின்
உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் நியமன கடிதத்தை, மத்திய
சிறுபான்மை விவகாரத்துறை வழங்கியுள்ளது. இவர், கடந்த, ஜூலை 30ம் தேதியில்
இருந்து, மூன்றாண்டு காலம் பதவி வகிப்பார்.

