உறுப்பினர் சேர்க்கை: அடிக்கடி முடங்கும் த.வெ.க., சர்வர்
உறுப்பினர் சேர்க்கை: அடிக்கடி முடங்கும் த.வெ.க., சர்வர்
ADDED : நவ 11, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: த.வெ.க., உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என, தனி செயலியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். அப்போதே, லட்சக்கணக்கான ரசிகர்கள், இதில் இணைந்தனர். த.வெ.க.,வுக்கென விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி முடித்த பின், உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் வேகமெடுத்துள்ளது.
செயலி வாயிலாக உறுப்பினர்களாக சேர பலர் ஆர்வம் காட்டுவதால், த.வெ.க., சர்வர் கடந்த சில நாட்களாக அடிக்கடி முடங்குவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'செயலி வாயிலாக இணைய ஒரே நேரத்தில் பலர் ஆர்வமாக இருப்பதால், இதற்கான சர்வர் அடிக்கடி முடங்குகிறது. 'எனவே, உறுப்பினர்களாக சேர இருப்பவர்களின் விபரங்களை சேகரித்து, சர்வர் இயல்பு நிலைக்கு திரும்பியதும், அதில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.