சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
UPDATED : பிப் 23, 2025 10:47 AM
ADDED : பிப் 23, 2025 10:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை தாம்பரம் பஸ் நிலையம் அருகே, நடுரோட்டில் ரகளை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் கண்முன்னே அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் பஸ் நிலையம் அருகே, நடுரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் விசாரணை நடத்தி கொண்டு இருந்தார்.
அந்த வழியாக காரில் வந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் கண்முன்னே நடந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.