ADDED : செப் 19, 2024 12:27 AM
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில், மூன்று நாட்கள் நடக்கும், 'ஐ.எப்.டி.எம்., டாப் ரேசா --- 2024' எனும் சுற்றுலா வர்த்தக கண்காட்சியில், தமிழக சுற்றுலா துறையின் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, அந்நாட்டிற்கான இந்திய துாதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார். இதன் வாயிலாக, தமிழகத்திற்கு, சுற்றுலா சார்ந்த முதலீடுகளும், சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளும் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களின் நீதிமன்ற காவல் நேற்று முடிந்த நிலையில், செப்., 27 வரை நீட்டித்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.