ADDED : செப் 21, 2024 01:04 AM
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் உள்ள, 18,000த்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது.
மாணவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க 25ம் தேதி வரை பதிவு செய்யலாம்; விருப்பமான கல்லுாரிகளில் இடம் தேர்வு செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்கப்படுகிறது. அப்பகுதியில், 17.60 கோடி ரூபாயில், வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மொரணப்பள்ளியில், 30 கோடி ரூபாயில் அமையும் புதிய பஸ் நிலையத்தில், பெங்களூருக்கு அதிக பஸ்களை இயக்கும் வகையில், 18.20 கோடி ரூபாயில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.