ADDED : செப் 24, 2024 10:45 PM
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரித்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், இந்தாண்டு ஜூன் 20ல் அமைக்கப்பட்டது. கமிஷனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பதவி காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் பதிவு செய்யவும், கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்யவும் இன்று கடைசி நாள். இடங்கள் ஒதுக்கீடு பெற்றவர்கள் விபரம், வரும் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது.