ADDED : நவ 03, 2024 02:51 AM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வரும் 6 முதல் 8ம் தேதி வரை, 67வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடக்க உள்ளது. இதில், தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். அதற்காக நேற்று இரவு அவர் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து நாளை இரவு ஆஸ்திரேலியா செல்கிறார். முன்னதாக, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வரும், 17ல் அப்பாவு சென்னை திரும்புகிறார்.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பண்டக சாலைகள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர், எடையாளர் பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் பெறும் பணி, கடந்த மாதம், 9ம் தேதி துவங்கியது. வரும் 7ம் தேதி கடைசி நாள். இதுவரை, 30,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியாக இருந்தாலும், முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.