தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காற்றின் வேகம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றின் வேகம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றின் வேகம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்


ADDED : ஜூன் 13, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:வரும் நாட்களில் காற்றின் வேகம், 12 கி.மீ., அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த வார வானிலையை பொறுத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 78.8 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம், 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம், 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு, 12 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி, வெள்ளை கழிச்சல் மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. தீவன மேலாண்மை முறைகளை, பண்ணையாளர்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். உயிர் எதிர் மருந்துகளை அளித்தும், தடுப்பூசி செலுத்தியும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us