'டாப்ளர் ரேடார்' பயிற்சி முகாம் வானிலை மையம் அழைப்பு
'டாப்ளர் ரேடார்' பயிற்சி முகாம் வானிலை மையம் அழைப்பு
ADDED : ஜன 31, 2025 10:40 PM
சென்னை:'டாப்ளர் ரேடார்'களின் செயல்பாடு குறித்தும், அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், ஐந்து நாட்கள் நடக்க உள்ள பயிற்சி முகாமில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க, வானிலை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன் அறிக்கை:
வானிலை தகவல்களை துல்லியமாக சேகரிக்க, 'டாப்ளர் ரேடார்கள்' பிரதானமாக பயன்படுகின்றன. இதன் செயல்பாடு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 'எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன்' பாடப்பிரிவு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில், சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களை சேர்ந்த, 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் நேரடியாகவும், கல்வி நிறுவன பரிந்துரை வாயிலாகவும், இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குறித்த விபரங்கள், 21ல் வெளியிடப்படும். பங்கேற்பாளர்கள், போக்குவரத்து, தங்கும் இடங்களை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி நடக்கும் நாட்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை, dwr.chennai@imd.gov.in, dwrchennai@gmail.com என்ற இ - மெயில் முகவரிகளில் அனுப்பலாம். கூடுதல் விபரங்களுக்கு, 94445 05838 என்ற மொபைல் போன் எண்ணில் காலை, 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.