UPDATED : டிச 24, 2024 09:25 AM
ADDED : டிச 24, 2024 07:13 AM

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு மெட்ரோ சேவை சீரானது.
வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் கோளாறு காரணமாக, 18 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். நீல வழித்தடத்தில், சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை வரை 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
7 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்போது 18 நிமிடமாக தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. விமான நிலையம் - சென்னை சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.
இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு, 8.50 மணிக்கு மெட்ரோ சேவை சீரானது.