ADDED : மே 28, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - கோவை மேட்டுப்பாளையம் இடையே, வாரம்தோறும் ஞாயிறு இரவு 7:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், ஜூன் 29ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. அதேபோல், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.