மேட்டூர் அணையின் நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையின் நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
UPDATED : ஜன 09, 2025 09:18 AM
ADDED : ஜன 09, 2025 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்; மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் மேட்டூர் அணை கடந்த ஆண்டில் மட்டும் 3 முறை நிரம்பியது. தற்போது, மழை பொய்த்து போனதால், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டது. இருப்பினும், பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 116 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போது, அணைக்கு 831 கனஅடியாக உள்ளது. நேற்று டெல்டா பாசனத்திற்கு 10,000 அடியாக திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.