ADDED : செப் 08, 2025 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வை இன்றுவரை இயங்கச்செய்வது எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரமே. இன்றைய அரசியல் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறேன். ஏதோ நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரை, அரசியலில் எதுவும் நடக்கலாம். கடைசி நாளில் கூட அரசியல் மாறலாம். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழ் குறைந்துவிடாமல், அ.தி.மு.க., தலைவர்கள் செயல்பட வேண்டும். தற்போது நடப்பது குடும்ப சண்டை போல் தான். 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை; அ.தி.மு.க., தொண்டனாக இருக்கிறேன்.
-- நடிகர் ராமராஜன் முன்னாள் எம்.பி., - அ.தி.மு.க.,