எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: அ.தி.மு.க., அலுவலகத்தில் இபிஎஸ் மரியாதை
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: அ.தி.மு.க., அலுவலகத்தில் இபிஎஸ் மரியாதை
UPDATED : ஜன 17, 2025 05:16 PM
ADDED : ஜன 17, 2025 05:09 PM

சென்னை: எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ், கட்சிக் கொடி ஏற்றினார்.
அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் இன்று (ஜன.,17) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடி ஏற்றி வைத்த அவர், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.