மிக்ஜாம் புயல் நிவாரணம்: திருவாவடுதுறை ஆதினம் ரூ.20 லட்சம் நிதி
மிக்ஜாம் புயல் நிவாரணம்: திருவாவடுதுறை ஆதினம் ரூ.20 லட்சம் நிதி
ADDED : ஜன 05, 2024 03:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சமீபத்தில் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று (ஜன.,5) சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.