ADDED : நவ 09, 2024 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இது உணரப்பட்டது.
பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. இதனால் எந்தவித பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை.
முன்னதாக, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.