தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தரத்தில் எப்போதும் சமரசமே கிடையாது: மில்கி மிஸ்ட் நிறுவனம் உறுதி

தரத்தில் எப்போதும் சமரசமே கிடையாது: மில்கி மிஸ்ட் நிறுவனம் உறுதி

தரத்தில் எப்போதும் சமரசமே கிடையாது: மில்கி மிஸ்ட் நிறுவனம் உறுதி


UPDATED : அக் 12, 2026 09:55 PM

ADDED : அக் 12, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:55 PM ADDED : அக் 12, 2026 07:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''தரத்தில் எப்போதும் எங்களுக்கு சமரசம் இல்லை,'' என, மில்கிமிஸ்ட் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் ரத்தினம் தெரிவித்தார்.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு, மில்கி மிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனம் சார்பில் 25 வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, 20 நாடுகளுக்கு ஏற்றுமதியும் நடந்து வருகிறது. தினமும், ஒரு கோடி மக்கள் மில்கிமிஸ்ட் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், நிறுவனத்தின் பால் பொருட்களின் தரம் குறைந்துள்ளதாக கூறப்பட்டது. பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களில் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நிறுவனத்தில் ஆய்வு நடத்த மாநில உணவுப்பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்புகாரில் உண்மை இல்லை. தரத்தில் எப்போதும் தங்களுக்கு சமரசம் இல்லை என, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்கிமிஸ்ட் முதன்மை செயல் அலுவலர் ரத்தினம் கூறியதாவது:

ஈரோட்டில் 2016ல் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலை துவங்கப்பட்டு பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தினமும் 15 லட்சம் லிட்டர் பால் வாங்கப்பட்டு பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையில் அவை பல்வேறு பொருட்களாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய அளவில் உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு உணவு மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படும் வழக்கமான நடைமுறை.

மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே ஆய்வுக்கு பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் ஆதாயம் அடைவதற்காக இதுபோன்ற தகவல்களை பரப்புகின்றனர். இப்புகாரில் உண்மை இல்லை. இதுவரை எங்களுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை. சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள எங்கள் நிறுவனம் எந்த விதத்திலாவது தரத்தில் சமரசம் செய்ய முடியுமா. தரத்தில் எப்போதும் எங்களுக்கு சமரசம் இல்லை. மத்திய உணவுப்பாதுகாப்பு துறையின் 12 பக்க கடிதத்தில், நாடு முழுவதும், 25 நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன. எங்கள் தயாரிப்புகளின் தரத்தை சர்வதேச அளவில் நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு. ஒழுங்குமுறை புள்ளி, தரம் ஆகியவற்றில் உணவுப்பாதுகாப்பு துறையின் அளவுகோல்களை விட நாங்கள் அதிகமாகவே வைத்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us