ADDED : மே 02, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், 'புதிய மினி பஸ் திட்டம் 2024' தயாரிக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதன்படி, மினி பஸ்களுக்கான வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
முதற்கட்டமாக, 1,842 புதிய மினி பஸ்கள் சேவை, இம்மாதம் 2வது வாரத்தில் துவங்கும் என கூறப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய அரசாணையை, தமிழக அரசு கடந்த, 28ம் தேதி வெளியிட்டது. புதிய அரசாணை ஜூன், 14 முதல் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிய மினி பஸ்கள் சேவை துவங்குவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

