தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வாகன உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதம் மினி டீசல் பங்க் அறிமுகம்

 வாகன உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதம் மினி டீசல் பங்க் அறிமுகம்

 வாகன உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதம் மினி டீசல் பங்க் அறிமுகம்


ADDED : செப் 29, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- நமது நிருபர்- -: பள்ளி, கல்லுாரி போன்ற அதிக எண்ணிக்கையில் வாகனங்களை வைத்துள்ளவர்களுக்கு உதவும் வகையில், ரிபோஸ் எனர்ஜி நிறுவனம் சார்பில், மினி டீசல் பங்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'பல்வேறு நடைமுறை சிரமங்களுக்கு தீர்வாக இருக்கும் இந்த மினி டீசல் பங்க், எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்' என்கின்றனர், வாகன உரிமையாளர்கள். பெரிய கட்டடம் கட்டும், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 44வது மாநில பொதுக்குழு மற்றும் 7வது மாநில மாநாடு, திருச்சி பஞ்சப்பூரில் நேற்று நடந்தது.

இதையொட்டி பெட்ரோலிய தயாரிப்புகள், வாகனங்களுக்கு புதிதாக வந்துள்ள ஆயில்கள், நவீன உதிரி பாகங்கள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், கிரிஸ்டல் கன்வெர்சன் மண்டபத்தில் இடம்பெற்றருந்தது. இதில், ரிபோஸ் எனர்ஜி நிறுவனத்தின் 'மினி டீசல் பங்க்' வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த ஸ்டாலில், ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தேவையான விளக்கத்தை பெற்றனர்.

எரி பொருள் மேலாண்மை இது குறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் அபராஜித் சுப்பிரமணியன் கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் எரி பொருள் மேலாண்மையாகும். கல்வி, கட்டுமானம், தளவாட பொருட்கள் பயன்பாட்டுக்காக, தினமும் அதிகமான வாகனங்களை பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு எங்கள் நிறுவனம் எரிபொருளை அவர்கள் பயன்படுத்தும் இடத்துக்கே கொண்டு சென்று வழங்குகிறோம்.

அதாவது 'மினி டீசல் பங்க்' போல இது செயல்படும். இந்த பங்கில் குறைந்தபட்சம் 2,000 லிட்டர் வரை டீசல் நிரப்பப்பட்டிருக்கும்.

வாகனங்களின் எண்கள், அதற்கு எவ்வளவு டீசல் தேவை என்பதை இந்த இயந்திரத்தில் பதிவு செய்து, அதை சாப்ட்வேர் மூலம் உரிமையாளர்கள் அல்லது கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி பெற்ற பின், வாகனங்களில் நிரப்பிக் கொள்ளலாம். 'மினி டீசல் பங்க்'கில் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பது தொடர்பான விபரங்களும் உடனுக்குடன் சாப்ட்வேர் மூலம் உரிமையாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கையிருப்பு குறைந்து டீசல் தேவைப்படும் போது, உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தால் அதற்குரிய பெட்ரோலிய விற்பனையாளர்கள் 'மினி பங்க்' இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று எரிபொருளை நிரப்பி விட்டு செல்வார்கள்.

திருட்டுக்கு வாய்ப்பில்லை இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் எரிபொருளுக்காக அலைய வேண்டியதில்லை. அதே போல், எரிபொருள் எவ்வளவு நிரப்பப்படுகிறது என்பது உரிமையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், திருட்டு நடைபெற வாய்ப்பில்லை.

குறைந்தபட்சம் 10 வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களின் இடத்துக்கு, எங்கள் நிறுவனம் நேரடியாக சென்று 'மினி டீசல் பங்க்'களை அமைக்கும்.

இந்த மினி பங்க்குகளை உரிமையாளர்கள் சொந்தமாகவும், வாடகைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் முதன் முறையாக ரிபோஸ் எனர்ஜி நிறுவனம் இந்த நவீன வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அபராஜித் சுப்பிரமணியன் கூறினார்.

தொடர்புக்கு 77589 88133

டீசல் செலவு 5 சதவீதம் மிச்சம்!

பள்ளி, கல்லுாரி நடத்துபவர்கள் மாணவர்களையும், பணியாளர்களையும் அழைத்து வருவதற்கும், வீடு கொண்டு சென்று சேர்ப்பதற்கும், சொந்தமாக அதிகமான வாகனங்களை வைத்து இருக்கின்றனர். அவர்கள், தினமும் பங்க் இருக்குமிடம் சென்று டீசல் நிரப்ப வேண்டியிருக்கிறது. இதில், டீசல் திருடப்படுவதும் நடக்கிறது. இன்னும் சில நடைமுறை சிரமங்களும் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு, பள்ளி, கல்லுாரி வளாகத்திலேயே, 'மினி டீசல் பங்க்' அமைப்பதை ரிபோஸ் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது, பள்ளி, கல்லுாரிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இதனால் டீசல் திருட்டை முழுமையாக தடுக்க முடியும். அதாவது மொத்த டீசல் செலவில், 5 சதவீதம் வரை மிச்சப்படுத்தப்படும். அதனால், இந்த மினி டீசல் பங்க்கிற்கு, பள்ளி, கல்லுாரி, நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துவோருக்கும், பெரிய கட்டடங்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் ரோடு ரோலர், டிராக்டர், கிரேன், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவற்றுக்கும் அதிகப்படியான டீசல் தேவை. இதனை பங்க் சென்று, டிரம்மில் வாங்கி வந்து, பயன்படுத்தும் போது கீழே சிந்தி கொஞ்சம் டீசல் வீணாகிறது. பெரிய டிரம்மில் வாங்கி வந்து, இருப்பு வைத்து இருக்கும் போது, இரவில் திருட்டு சம்பவமும் நடக்கிறது. இதுவே சராசரியாக 5 சதவீதம் இருக்கும். இதை தடுப்பதற்கு இந்த மினி டீசல் பங்க் பேருதவியாக இருக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us