அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு! பிரபல ஹாஸ்பிடலில் அட்மிட்!
அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு! பிரபல ஹாஸ்பிடலில் அட்மிட்!
ADDED : நவ 26, 2024 09:30 AM

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு உடல்நலக்கோளாறு காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க.,முக்கிய பிரமுகருமான கே.என்.நேரு மழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென உடல்சோர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை குறித்த எவ்வித தகவல்களையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. இருப்பினும், சிகிச்சை முடிந்து, பூரண நலத்துடன் அமைச்சர் நேரு வீடு திரும்புவார் என்று கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.