ADDED : ஜன 18, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு முன்னதாகவே பல்வேறு பிரச்னைகள் உருவாகும்.
ஜல்லிக்கட்டு அன்று டோக்கனில் முறைகேடு, காளையை அனுமதிக்கவில்லை, சார்பாக செயல்படுகின்றனர் என பல புகார்கள் கிளம்பும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த பிரச்னைகளோ புகார்களோ இன்றி 3 ஜல்லிக்கட்டுகளும் சிறப்பாக நடந்து முடிந்தன.
இதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி நேரடியாக ஏற்பாடுகளை செய்தது தான். விழா ஏற்பாடுகள் துவங்கி காளைகள், வீரர்கள் பதிவு என ஒவ்வொன்றிலும் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் முன்னின்று கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.