மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெறுவது வைப்பு தொகை தான் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெறுவது வைப்பு தொகை தான் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
ADDED : செப் 19, 2025 08:13 PM
ஈரோடு:''பாட்டிலுடன், 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது வைப்பு தொகையாக தான். பாட்டிலை திரும்ப வழங்கும் போது, 10 ரூபாயை மீண்டும் அவர்களிடமே வழங்கி விடுகிறோம்,'' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
அமைச்சர் முத்துசாமி ஈரோடில் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
பிற பகுதிகளில் விரிவாக்கம் செய்துள்ளோம். காலி பாட்டிலை சாலை, வயல்களில் போட்டு செல்கின்றனர். பாட்டிலுடன், 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது வைப்பு தொகையாக தான். பாட்டிலை திரும்ப வழங்கும் போது, 10 ரூபாயை மீண்டும் அவர்களிடமே வழங்கி விடுகிறோம்; இதை பலரும் தவறாக பேசுகின்றனர்.
பாட்டிலை திரும்ப தராதவர்களுக்கு, 10 ரூபாய் நஷ்டம். சேகரிக்கப்படும் பாட்டில், 50 காசு, ஒரு ரூபாய்க்கு கூட விற்காது. இதெல்லாம் உங்கள் காலில் குத்திவிடக்கூடாது என்பதற்காக தான். இதை தப்பு தப்பாக பேசுகிறீர்கள் .
இவ்வாறு அவர் கூறினார்.