sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அமைச்சர் நேரு மீது வழக்கு பதியவில்லை: முதல்வர் மீது அ.தி.மு.க., கடும் குற்றச்சாட்டு

/

 தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அமைச்சர் நேரு மீது வழக்கு பதியவில்லை: முதல்வர் மீது அ.தி.மு.க., கடும் குற்றச்சாட்டு

 தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அமைச்சர் நேரு மீது வழக்கு பதியவில்லை: முதல்வர் மீது அ.தி.மு.க., கடும் குற்றச்சாட்டு

 தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அமைச்சர் நேரு மீது வழக்கு பதியவில்லை: முதல்வர் மீது அ.தி.மு.க., கடும் குற்றச்சாட்டு

8


ADDED : பிப் 22, 2026 12:50 AM

Google News

8

ADDED : பிப் 22, 2026 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின், தன்னை காப்பாற்றிக் கொள் ளவே, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யவில்லை' என, அ.தி.மு.க., குற்றம் சாட்டி யுள்ளது.

இது தொடர்பாக, அக் கட்சி வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய விபரங்கள் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பொறுப்பு டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடந்த 2025 டிச., 3ல், அனுப்பிய ஆவணத் தொகுப்பின் பக்கம் 51ல், 'டெண்டர்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான கமிஷன், கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தன் அமைச்சர் என்பதால் அவரை காப்பாற்றவே, நேரு மீது தி.மு.க., அரசு வழக்குப் பதியவில்லை என நினைத்திருந்தோம்.

ஆனால், தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொள்ளவே, முதல்வர் ஸ்டாலின் இத்தனை நாட்களாக வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்காக வந்த, 'தொட்டுப் பார், சீண்டிப் பார்' போன்ற வீடியோ, அமைச்சர் நேருவுக் காக ஸ்டாலினிடம் இருந்து வராமல் போனதற்கு, இதுதான் காரணமா.

செந்தில் பாலாஜி வழக்கில், சுற்றிச்சுற்றி தன் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கை தொட்டாலே, முதலில் ஸ்டாலினும் அவர் மகனும் தான் மாட்டுவர் போலிருக்கிறது.

நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் 1,020 கோடி ரூபாய் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள்.அவற்றில், தந்தை - மகன் கூட்டணிக்கு எவ்வளவு பங்கு என கணக்கிட்டால், தமிழகத்திற்கு ஓராண்டு பட்ஜெட் போட்டு விடலாம்.

இன்னும் இரு மாதங்கள் தான். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து கோப்புகளும் திறக்கப்பட்டு முகத்திரைகள் கிழிக்கப்படுவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us