பா.ஜ.,வின் ஊதுகுழலாக முழங்குகிறார் கவர்னர்; மீது அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்
பா.ஜ.,வின் ஊதுகுழலாக முழங்குகிறார் கவர்னர்; மீது அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்
ADDED : நவ 26, 2025 06:59 AM

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
தமிழகத்தை இழிவுப்படுத்துவதையே, கவர்னர் ரவி, தன் தொழிலாகக் கொண்டிருக்கிறார். பா.ஜ.,வின் ஊதுகுழலாக முழங்கி வருகிறார்.
'திராவிடம் என்பது கற்பனை. தமிழகத்தில் பீஹாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். தமிழகத்தில் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன' என, கவர்னர் தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம் பெற்றிருப்பது, கவர்னருக்கு தெரியாதா? பீஹாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற வகையில் உள்ளது என, பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
தமிழகத்தில் வாழும் பீஹார் மக்கள், 'எங்களுக்கு நல்ல பொருளாதாரம் கிடைக்கிறது. பாதுகாப்பாக, வசதியான வாழ்க்கை வாழ்கிறோம்' என தெரிவிக்கின்றனர்.
ஒடிசா தேர்தலில், 'ஒடிசாவை தமிழன் ஆள வேண்டுமா; ஒடிசாவின் சாவி தமிழகத்தில் இருக்கிறது' என, தமிழர்களை திருடர்கள் போல் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குற்றம் சுமத்தினர். தமிழர்கள் என்ன திருடர்களா; தமிழகம் குற்ற வாளிகள் பிறப்பிடமா.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது கவர்னர் ஏதேனும் அறிக்கை வெளியிட்டிருப்பரா.
இவ்வாறு அவர் கூறினார்.

