தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நேபாளத்திலிருந்து திரும்பியவர்களுக்கு அமைச்சர் ராஜ்குமார் ஆறுதல்

 நேபாளத்திலிருந்து திரும்பியவர்களுக்கு அமைச்சர் ராஜ்குமார் ஆறுதல்

 நேபாளத்திலிருந்து திரும்பியவர்களுக்கு அமைச்சர் ராஜ்குமார் ஆறுதல்


ADDED : ஆக 30, 2026 09:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 09:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டு, ஊர் திரும்பிய சிதம்பரத்தை சேர்ந்தவர்களை, அமைச்சர் ராஜ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிதம்பரத்தில் இருந்து சென்ற ஆன்மிக பயணிகள் 11 பேர் சிக்கினர். அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

டில்லி வழியாக நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களில் 5 பேர், சிதம்பரத்தைச் சேர்வர்களாக இருந்தும், தற்போது அவர்கள் வசித்து வரும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்றனர். மீதமுள்ள 6 பேர் சிதம்பரம் வந்து சேர்ந்தனர்.

ஊர் திரும்பிய, சிதம்பரத்தை சேர்ந்த முத்துகுமரேசன், 56; அவரது மனைவி மைதிலி, 49; தியாகராஜன்,55; அவரது மனைவி கிருபாகிரி, 48; பழனியப்பன், 69; அவரது மனைவி, 62; கலைமதி ஆகிய 6 பேரையும், நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து சம்பவம் பற்றி கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

அப்போது, அமைச்சர் ராஜ்குமார் கூறுகையில், நேபாள வெள்ள பாதிப்பில் இருந்து சிதம்பரத்தை சேர்ந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில், சிதம்பரம் முருகானந்தம், புவனகிரி திரிபுரசுந்தரி இருவர் மட்டும், எங்கு உள்ளனர் என்ற தகவல் இல்லை.

அவர்களையும் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர் என்றார்.

சிதம்பரம் சப் கலெக்டர் (பொ) தனலட்சுமி, டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us