ADDED : மார் 18, 2025 08:20 PM
திருச்செந்துார் கோவிலில், நேற்று கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று, ராமேஸ்வரம் கோவிலில், வட மாநில பக்தர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். திருச்செந்துார் கோவிலில் உயிரிழந்தவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று சமாளித்த, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், அடிப்படை வசதிகளை கூட செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது, தி.மு.க., அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது, பல நாள் கோரிக்கை. ஆனால், எந்த பணிகளும் செய்யாத அறநிலைய துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்து கொண்டிருக்கிறார் அமைச்சர்.
அமைச்சர் தான், இந்த இரு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.