7,400 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்
7,400 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்
ADDED : ஜன 31, 2025 09:51 PM
சென்னை:'தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, 7,132 கோடி ரூபாய் மதிப்பிலான, 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசு மதசார்பின்மையை கடைப்பிடித்து, சமய நல்லிணக்கத்தை ஆதரித்து வருகிறது. மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, கோவில் பணிகளை சிரத்தையுடன் செய்து வருகிறது. மக்களின் சமய உணர்வுகளை மதித்து, வழிபாட்டு தலங்களை வளப்படுத்துவதில் பெரும் அக்கறையோடு அரசு செயல்படுகிறது. இதற்கு அறநிலையத்துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாக உள்ளன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை, 2,392 கோவில்களில் மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. மேலும், 7,132 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.