ADDED : நவ 28, 2025 03:46 AM

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண்களின் ஆபாச நடனம் அரங்கேறி உள்ளது. இதை கண்டித்து, தமிழக பா.ஜ., வெளியிட்ட அறிக்கை:
எவ்வித தகுதியுமின்றி, வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் பிறந்த நாளை, மூத்த அமைச்சர்கள் கொண்டாடுவது என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்.
அதிலும், அந்த விழாவை, ஆபாச விழாவாக மாற்றி ரசிப்பது எத்தனை பெரிய கேவலம்.
இப்படிப்பட்டவர்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு குறித்து பேச, துளி அளவாவது தகுதி இருக்கிறதா? பெண்களை அரைகுறை ஆடையுடன் நடனமாட வைத்து கைதட்டி ரசிக்கும், தி.மு.க., தலைவர்களை நம்பி, தமிழக பெண்கள் எப்படி தங்கள் குறைகளை தெரிவிப்பர்?
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என, அரசு இயந்திரமே பழுதான நிலையில், முதல்வர் முதல் மூத்த அமைச்சர்கள் வரை, கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது வெட்கக்கேடு.
காலம் காலமாக, உடல்சார் அரசியலை மட்டுமே முன்னெடுத்து வரும் தி.மு.க.,வினரிடம் இருந்து, நாகரிக நிர்வாகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

