ஊழல் குறித்து ஆதாரமில்லாமல் அமைச்சர்கள் பேசக்கூடாது: சபாநாயகர்
ஊழல் குறித்து ஆதாரமில்லாமல் அமைச்சர்கள் பேசக்கூடாது: சபாநாயகர்
ADDED : ஆக 17, 2026 09:36 PM

சென்னை: ''ஊழல் குறித்து, அமைச்சர்கள் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
* அமைச்சர் அருண்ராஜ்: கடந்த ஆட்சிகளில், மக்கள் பயனடைய கூடிய நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், தவறுகளும் நடந்தன.
* சபாநாயகர் பிரபாபகர்: ஊழல் குறித்து அமைச்சர்கள் பேசும் போது, ஆதாரத்துடன் பேச வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது.
* தி.மு.க., - ஓ.பன்னீர்செல்வம்: சட்டசபை காலை 9:30 மணிக்கு கூடியது. அமைச்சர் அருண்ராஜ், 3:30 மணிக்கு பேச தொடங்கி, 52 நிமிடங்கள் ஆகி விட்டன. உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலுரையாக தான் அவர் பேச வேண்டும். தேவையில்லாத பிரச்னையை பற்றி பேசக்கூடாது.
நிறைய பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மயங்கி மயங்கி விழுகின்றனர். பயங்கர வேதனையாக இருக்கிறது; சமாளிக்க முடியவில்லை. இல்லையென்றால், அமைச்சர் பதிலுரையை, நாளை காலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
