உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 01, 2026 01:07 PM
ADDED : அக் 01, 2026 10:00 AM
அ நிறம் | அளவு
அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியை உணவாக அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக, அமைச்சர் வன்னியரசு கூறியது கண்டனத்திற்குரியது; அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாட்டிறைச்சி தமிழக கலாசாரத்தில் இல்லாத ஒன்று. மாணவர்கள் கேட்டதால், அந்த கருத்தை சொன்னதாக கூறி, மெதுவாக தமிழ் சமூகத்திற்குள் மாட்டிறைச்சியை புகுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது.
இது போன்ற கருத்துக்களை, இனி எந்த அமைச்சரும் பேசக்கூடாது; த.வெ.க., அரசு அனுமதிக்க கூடாது. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில், உணவு அரைவேக்காடாக உள்ளது; படிக்க, உடற்பயிற்சி செய்ய வசதி இல்லை. ஆதிதிராவிடர் என்றாலே மாட்டுக்கறி சாப்பிடுவர், அதை தான் விரும்புவர் என்ற கருத்தை திணிக்க நினைப்பதை ஏற்க முடியாது.
- இளைஞரணி தலைவர்: புதிய தமிழகம் கட்சி
