உலக சவால்களை எதிர்கொள்ள 'நானோ' தொழில்நுட்பம் உத வும்; வி.ஐ.டி., மாநாட்டில் அமைச்சர் பேச்சு
உலக சவால்களை எதிர்கொள்ள 'நானோ' தொழில்நுட்பம் உத வும்; வி.ஐ.டி., மாநாட்டில் அமைச்சர் பேச்சு
ADDED : டிச 19, 2025 06:18 AM

சென்னை: “உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள, 'நானோ' தொழில்நுட்பம் உதவும்,” என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலையில், மூன்றாவது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் குறித்த நான்கு நாள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பேசியதாவது:
'நானோ' தொழில் நுட் பம், வெறும் அறிவியல் வளர்ச்சி அல்ல; அது ஒரு புரட்சி. நானோ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகள், வருங்கால தொழில் துறையில் முன்னிலை வகிக்கும்.
ஆராய்ச்சி இந்த தொழில்நுட்பம், உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள, பொருட்களை வடிவமைக்க உதவுகிறது. தமிழக அரசு, புதுமைப்பெண், ஆராய்ச்சி உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விசுவநாதன் பேசுகையில், “ஒரு நாடு, முன்னேறிய நாடாக மாற, உயர் கல்வியே அவசியம். மத்திய, மாநில அரசுகள், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,” என்றார்.
வளர்ச்சி நோபல் விஞ்ஞானியும், அமெரிக்காவின் எம்.ஐ.டி., கல்வி நிறுவன பேராசிரியருமான மவுங்கி பவெண்டி பேசுகையில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி, மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியை பயன்படுத்துவது முக்கி யம். இதற்கு, மாணவ - மாணவியரை ஊக்குவிக்க வேண்டும். வி.ஐ.டி., பல்கலை இதை சிறப்பாக செய்து வருகிறது,” என்றார்.
மாநாட்டில், வி.ஐ.டி., துணை தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், நானோ அறிவியல் மையத்தின் இயக்குநர் நிர்மலா கிரேஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

