ADDED : செப் 16, 2011 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் அருகே அய்யப்பன்பட்டியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும், உக்கிரபாண்டி(23) என்பருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இது தொடர்பாக உறவினர்கள் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு புகார் அனுப்பினர். தாசில்தார் ரவிச்சந்திரன், வி.ஏ.ஓ.,சந்திரன், விக்கிரமங்கலம் எஸ்.ஐ.,உமாராணி, ஏட்டுகள் சுரேந்திரன், மதிவாணன் ஆகியோர் திருமணத்தை நிறுத்தி, பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் நடத்த பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.