ADDED : டிச 13, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க.,வின் கொள்கையை சார்ந்து தீர்ப்பு வழங்கவில்லை என, நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சியினர் அணி திரண்டு, பதவி நீக்கம் செய்யுமாறு கையெழுத்திட்டுள்ளனர். சிறுபான்மையினர் ஓட்டு வங்கி, அவர்களை ஆட்டிப்படைக்கிறது. நீதித்துறையில் உள்ள பல பிரச்னைகள் பற்றி கவலைப்படாத தி.மு.க., அரசு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அணி திரட்டுகிறது. அந்த அளவுக்கு, அவர்களின் ஹிந்து மத வெறுப்பு உள்ளது.
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக, ஹிந்து சமய அறநிலையத்துறை போராடுவது விசித்திரமாக உள்ளது. தி.மு.க., கொள்கையை அமல்படுத்தும் துறையாக அது மாறி விட்டது. மதச்சார்பற்ற அரசு என்றால் அனைத்து மதத்தவர்களையும் சமமாக நடத்த வேண்டும். அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியும், அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரிக்க தி.மு.க., அரசுக்கு நேரம் இல்லை.
- வானதி
எம்.எல்.ஏ., - பா.ஜ.,

