ADDED : அக் 02, 2025 06:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரியின் கிளை நதி நொய்யல். அதன் கிளை நதி கவுசிகா. ஆனால், அப்படி ஒரு நதி இருந்ததற்கான எந்த அடையாளமும் சான்றும் இல்லாமல் ஆக்கி வைத்திருந்தார்கள், பொறுப்பில்லாத அதிகாரிகளும் ஊழியர்களும்.
நதியை தேடி மேற்கு தொடர்ச்சி மலையில் யாத்திரை சென்றது தினமலர் குழு. நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது நொய்யலில் சங்கமிக்கும் இடம் வரையில் காட்சிப்படுத்தி செய்தியாக்கி ஆவணப்படுத்தியது. அதன் விளைவாக எழுந்த சமூக எழுச்சி, சமகால கொங்கு சரித்திரத்தின் சாதனை அத்தியாயம்.
மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு அந்த முக்கியத்துவத்தை அங்கீகரித்து, ஊரக மேம்பாடுக்கு மிகச்சிறந்த பங்களிப்பாக முத்திரை குத்தி, தேசிய விருது வழங்கி கவுரவித்தது.