ADDED : மார் 18, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; 'கனிம வளங்களை ஏற்றிச்செல்ல, தமிழகத்திற்கு வரும் லாரிகளுக்கு, 'இ- - பாஸ்' முறை கொண்டு வர வேண்டும்' என, கடையநல்லூர் தொகுதி, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி வலியுறுத்தினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, தினமும் 3,000 லாரிகள், கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கேரளா செல்கின்றன.
இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளும் சேதமடைகின்றன; விபத்துகள் அதிகரித்துள்ளன. வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை லாரிகள் பின்பற்றுவதில்லை.
சபரிமலை, கொடைக்கானல் செல்ல, 'இ- - பாஸ்' முறை உள்ளது. அதுபோல, கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்களை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும், 'இ- - பாஸ்' முறையை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.