தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் உயர்வு

எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் உயர்வு

எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் உயர்வு


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.எல்.ஏ.,க்களின் மாத ஊதியத்தை, 1.05 லட்சம் ரூபாயில் இருந்து 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத ஊதியமாக 1.05 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, அவசர கால மருத்துவ செலவிற்கு 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ‘எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்கப்படும். இதற்காக டிரைவர் மற்றும் எரிபொருள் செலவிற்கு, 75 ஆயிரம் ரூபாயும், அலுவலக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்க, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்’ என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக இந்த தொகை விடுவிக்கப்படவுள்ளது. டிரைவர், எரிபொருள், உதவியாளர் ஊதியம் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் மாத ஊதியம் 1.80 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us