ADDED : ஏப் 09, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அவரது மனைவிக்கும், தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் நன்றி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, உணவு, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பழனி நாடார், ''தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது.
''இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரில் வந்து, கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமாக நடத்தி தந்த அமைச்சர் சேகர்பாபுவின் துணைவியாருக்கும் தென்காசி மக்களின் சார்பில் நன்றி,'' என்றார்.