ADDED : அக் 17, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சபாநாயகர் உத்தரவை மீறி, கவர்னர் ரவியை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.
கவர்னர் ரவியை திருப்பி அனுப்பிய, தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான விவாதம் துவங்கும் முன் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''கவர்னரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து யாரும் பேசக் கூடாது. அப்படி பேசுவதை அனுமதிக்க மாட்டேன்,'' என்றார்.
ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது ஆகியோர், கவர்னர் ரவியை கடுமையாக விமர்சித்தனர். 'உச்ச நீதிமன்றம் வாயிலாக, அவரை 'டிஸ்மிஸ்' செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.