தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை


UPDATED : ஆக 11, 2025 08:17 AM

ADDED : ஆக 11, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2025 08:17 AM ADDED : ஆக 11, 2025 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:


தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில், 8; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், 7; கரூர், கடலுார் மாவட்டம் லக்கூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார், மதுரை மாவட்டம் குப்பணம்பட்டி பகுதியில், தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us