தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை


ADDED : டிச 15, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், வரும், 18ம் தேதி வரை, மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குளிர் காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழக தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us