ADDED : ஜன 06, 2026 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், வரும் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்றும் நாளையும், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் சில இடங்களில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

