தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாளை(நவ.27) 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாளை(நவ.27) 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாளை(நவ.27) 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


UPDATED : நவ 26, 2026 07:22 PM

ADDED : நவ 26, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:22 PM ADDED : நவ 26, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 19 மாவட்டங்களில் நாளை(நவ.27) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. குமரிக்கடல் முதல் தமிழகம், கேரளா வழியாக, தெற்கு கர்நாடகா வரை, வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us