தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
UPDATED : டிச 05, 2025 02:29 PM
ADDED : டிச 05, 2025 02:14 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,05) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். திருநெல்வேலி, தென்காசியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று (டிச.,05) திருநெல்வேலி, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (டிச.,06) முதல் டிசம்பர் 11ம் தேதி வரை மிதமான மழை தொடரும். இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

