sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 டில்லியில் மோடி; தமிழகத்தில் எடப்பாடி உங்கள் தொகுதியில் தாமரை:: பா.ஜ., பிரசாரம்

/

 டில்லியில் மோடி; தமிழகத்தில் எடப்பாடி உங்கள் தொகுதியில் தாமரை:: பா.ஜ., பிரசாரம்

 டில்லியில் மோடி; தமிழகத்தில் எடப்பாடி உங்கள் தொகுதியில் தாமரை:: பா.ஜ., பிரசாரம்

 டில்லியில் மோடி; தமிழகத்தில் எடப்பாடி உங்கள் தொகுதியில் தாமரை:: பா.ஜ., பிரசாரம்


ADDED : பிப் 22, 2026 04:34 AM

Google News

ADDED : பிப் 22, 2026 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, 'டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; உங்கள் தொகுதியில் தாமரை' என்ற பிரசாரத்தை, பா.ஜ., துவக்கி உள்ளது.

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி உருவாகி உள்ளது. ஒவ்வொரு கூட்டணியில் உள்ள கட்சிகளும், தங்களுக்கு ஆதரவு கேட்டு, மக்களிடம் பிரசாரத்தை துவக்கி உள்ளன.

அந்த வரிசையில், 'டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; உங்கள் தொகுதியில் தாமரை' என்ற வாசகத்துடன், பிரசாரத்தை துவக்கி உள்ளது.

அக்கட்சி போட்டியிட எதிர்பார்க்கும் தொகுதிகளில், சுவர் விளம்பரம் செய்து வருகிறது. சென்னையில் பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், 'டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; வேளச்சேரியில் தாமரை' என, சுவர் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், மாநிலம் முழுதும் பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது.

இது குறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:

பிரதமர் மோடி, உலக அளவில் ஈர்ப்புக்குரிய தலைவராக இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி.

பா.ஜ.,வின் சின்னம் தாமரை. இந்த மூன்றையும், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப்படுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, 'டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; உங்கள் தொகுதியில் தாமரை' என்ற வாசகம், பா.ஜ., சார்பில் சுவர் விளம்பரங்களாக எழுதப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us