33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபம் வந்த மோடி : வைரலாகும் புகைப்படம்
33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபம் வந்த மோடி : வைரலாகும் புகைப்படம்
ADDED : மே 30, 2024 07:06 PM

குமரி: 33 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூன்று பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (30.05.2024) கன்னியகுமரி சென்றுள்ளார். அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் 48 மணி நேர தியானத்தை துவக்குகிறார்.
இந்நிலையில் கடந்த 1991ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‛‛ ஏக்தா யாத்திரை'' தமிழகத்தில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் துவங்கி, 1992, ஜன.26-ல் காஷ்மீரில் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.
இந்த யாத்திரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ஏக்தா யாத்திரை துவங்கும் முன் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் முரளி மனோகர் ஜோஷியுடன் பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை நினைவு கூறும் விதமாக 33 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.